விஜய்யின் மெர்சல் படம் நல்ல வசூல் ஈட்டி வரும் நிலையில், நெல்லையில் ஒரு பிரபல திரையரங்கம் வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அதற்கு சிலர் “நீங்கள் எல்லா படத்தையும் ஹிட் என்று தான் சொல்கிறீர்கள்” என விமர்சனம் செய்துள்ளனர். இதற்கு ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ள அந்த திரையரங்க நிர்வாகம் “விஜய்யின் தெறி படம் 58 நாளில் வசூலை மெர்சல் பத்தே நாளில் முறியடித்துவிட்டது. மேலும் உண்மையான வெற்றியாக இருந்தால் சத்தமாக கொண்டாடுவோம், இல்லை என்றால் அமைதியாக இருப்போம்” என தெரிவித்துள்ளார்.