தனி நாடாக கட்டலோனியா பிரகடனம்! இலங்கை அதிர்ச்சியில்!

ஸ்பெயினின் கடும் எதிர்ப்பையும் மீறி, கட்டலோனிய பாராளுமன்றம் சுதந்திரக் குடியரசாகத் தன்னை நேற்று பிரகடனப்படுத்தியது.

எனினும் கட்டலோனியாவை தனி நாடாக ஏற்று கொள்ள முடியாதென இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கட்டலோனியாவை ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியாக மாத்திரம் ஏற்று கொள்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, கலந்துரையாடல் வழியில் மாத்திரம் குறித்த பிரச்சினையை தீர்த்து கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Catalonia-788481