நடிகை குஷ்பூ சமீபகாலமாக உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வருகிறார். ஆனாலும் சமூக வலைதளங்களில் சில கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் மெர்சல் படத்திற்கு ஆதரவாகவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
அவருக்கு சமீபத்தில் தன் வீட்டில் வழுக்கி விழுந்ததால் காலில் அடிபட்டிருந்தது. இதனால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் அதற்கு முன்பே அவருக்கு வயிறு பிரச்சனைகள் இருக்கிறதாம்.
இது குறித்து குஷ்பூ செய்தியாளர்களிடம் கூறிய தகவலில் வயிற்றில் இருக்கும் சிறு கட்டியை அகற்ற வரும் 4ம் தேதி ஆப்ரேஷன் செய்ய இருப்பதாக கூறியுள்ளார். இதனால் அவர் 4,8,17ம் தேதிகளில் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.