பலவந்தமாக ‘சுன்னத்து’ செய்து, மனைவியையும் பிரித்த கொடுமை!!: மனைவியை கண்டுபிடித்து தருமாறு கணவன் பொலிசில் முறைப்பாடு..!!

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் பிரதாபன் வயது (24) என்பவரே 26-10-2017 தனது மனைவியாகிய பி.றிமாசா வயது (18) கண்டுபிடித்து தருமாறு முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பதிவுத்திருமணம் மேற்கொண்டு வாழ்க்கை நடத்திவந்த நிலையில் பெண் வீட்டார் வஞ்சகமாக தன் மனைவியை தன்னைவிட்டு பிரித்து சென்றுவிட்டதாகவும் தன் மனைவியை மீட்டுத் தருமாறும் அம் முறைப்பாட்டில் கோரியுள்ளார்.

அத்துடன் கட்டாயப்படுத்தி ‘சுன்னத்து’ செய்தமைக்காக சுன்னத்து செய்த நபரை பொலிசார் இன்று (28) வவுனியாவில் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.908இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த சந்திரன் பிரதாபன்.

வவுனியாவில் பசார் வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்த போது அக்கடையின் உரிமையாளரின் மகள் தன்னை காதலித்து வந்தநிலையில் தங்கள் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது.

இதனால் வேறொருவருக்கு கலியாண ஏற்பாடுகள் நடந்த நிலையில் அப்பெண் தன்னிடம் தன்னை கூட்டிச் செல்லுமாறு இல்லாத பட்சத்தில் தற்கொலை செய்துகொள்வேன் என தெரிவித்த நிலையில் எனது காதலியை அழைத்துக்கொண்டு கண்டி சென்று அங்கு பதிவுத்திருமணம் மேற்கொண்டு குடும்பம் நடத்தி வந்த நிலையில்..

மீண்டும் வவுனியாவிற்கு வந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துவிட்டு எனது மனைவியுடன் வவுனியா கோவில் குளத்தில் வசித்து வந்தேன்.

இந்நிலையில் பெண்ணின் பெற்றோர் தங்கள் மத சடங்கின்படி திருமணம் செய்து வைப்பதாக நயவஞ்சகமாக என்னையும் மனைவியையும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று எங்களை அடைத்து வைத்ததுடன்.

என்னை  பலமாக தாக்கி கட்டாயப்படுத்தி எனது சம்மதத்திற்கு மாறாக ‘சுன்னத்து’ செய்து பொலிஸ் நிலையத்தில் நான் என் மனைவியை சீதனம் கேட்டு அடிப்பதாக என்மீது பொய்யான முறைப்பாட்டை கொடுத்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைத்து இப்போது பிணையில் வெளியே வந்துள்ளேன்.

நான் விளக்க மறியல் இருந்த 14 நாட்களுக்குள் எனது மனைவி றிமாசாவை மறைத்து வைத்துள்ளனர்.

இதன் காரணமாக நான் உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டுள்ளேன் எனவே எனது மனைவியை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்குமாறு வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpgயயயயய
625.0.560.320.160.600.053.800.700.160.90  பலவந்தமாக ‘சுன்னத்து’ செய்து, மனைவியையும் பிரித்த கொடுமை!!: மனைவியை கண்டுபிடித்து தருமாறு கணவன் பொலிசில் முறைப்பாடு..!! (படங்கள்) 625