விஜய்க்கு வையாபுரி செய்த மிகப்பெரிய உதவி..! அது என்ன தெரியுமா?

விஜய்க்கு வையாபுரி செய்த மிகப்பெரிய உதவி..! அது என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முலம் ரசிகர்களின் மனதை நிறைவாக்கியதில் வையாபுரிக்கும் பங்குண்டு. ஓவியா விசயத்தில் இவருக்கும் ரசிகர்கள் பலர் உருவாகிவிட்டனர். இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டார்.

Capturedhb fcdrஅப்போது பேசிய வையாபுரி விஜய் சாருடன் இதுவரை 10 க்கும் அதிகமான படங்கள் நடித்துவிட்டேன். இப்போது அவருக்கென்று ஒரு பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.

அவர் சொன்னால் பலரும் கேட்பார்கள். பல நலத்திட்ட உதவிகளை செய்துவரும் அவர் வெறும் நடிப்பு, பாடல், ஆடல் என இருந்துவிடாமல் படங்களில் மக்களுக்கு மெசேஜ் சொல்லி வருகிறார்.

போக்கிரி படத்தில் நான் அவர், பிரபு தேவா மாஸ்டர் மூவரும் பணியாற்றினோம். அப்போது விஜய்க்கு மாஸ்டருடன் ஒரு டான்ஸ் ஆடவேண்டும் என ஆசை.

அவரிடம் கேட்க சங்கடப்பட்டுக்கொண்டு அண்ணா நீங்க தான் அவரை ஓகே சொல்ல வைக்கவேண்டும் என விஜய் கேட்டார். நானும் மாஸ்டரிடம் கேட்க அவரோ, வையாபுரி விஜய் எவ்வளவு பெரிய ஹீரோ, நான் எப்படி அவருடன் என தயங்கினார்.

பின் வையாபுரி, ஸ்ரீமன் எல்லோரும் சேர்ந்து பிரபு தேவா மாஸ்டரை ஒத்துக்கவைத்து, பின் விஜய்யுடன் ஆடினார். விஜய் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் என வையாபுரி கூறினார்.