அமெரிக்காவில் தாய் ஒருவர் தன்னுடைய வயிற்றில் இருக்கும் குழந்தையை உடனடியாக வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பிய வினோத சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் Utah மாகாணத்தை சேர்ந்தவர் Kaylee Bays, அங்குள்ள நீதிமன்றத்தில் பணிபுரிகிறார்
ஏற்கனவே இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக கர்ப்பமானார்.நிறைமாத கர்ப்பிணியான Kaylee Bays, கடந்த 16ம் திகதி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துவிடும் என எண்ணிய நிலையில், வலி நின்று போனது.
மறுபடியும் பிரசவ வலி வரவே இல்லை, இதனால் உடனடியாக வெளியேறுமாறு குழந்தைக்கு நோட்டீஸ் அனுப்ப எண்ணினார்.
இதன்படி நீதிபதி Lynn Davis-யும், Kaylee Bays-வின் கருவறையில் இருப்பவர் என குறிப்பிட்டு நோட்டீஸை அனுப்பியுள்ளார்.
இதை Kaylee Bays தன்னுடைய குழந்தைக்கு படித்து காண்பித்துள்ளார்.
மூன்று நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என நோட்டீஸ் அனுப்பிய நிலையில் 12 மணிநேரத்தில் பிறந்துவிட்டால், நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகவில்லை என புன்னகைக்கிறார்.
இந்த நோட்டீஸை பத்திரமாக வைத்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்