யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இணுவிலில் இராணுவ வாகனம் மோதுண்ட 36 வயதான பாலகிருஸ்ணன் விஜிதரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இணுவில் மத்திய கல்லூரிக்கு முன்பாக நேற்றிரவு இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.படுகாயமடைந்த விஜிதரன் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த அவரை அந்த வழியே பயணித்த இராணுவ கப் ரக வாகனம் மோதித் தள்ளியது.
வீதியில் உணர்வற்றுக் கிடந்த அவர், அந்த வழியே சென்ற தெல்லிப்பளை அம்புலன்ஸில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.பாலகிருஸ்ணன் விஜிதரன் வட்டுக்கோட்டை ஞானசம்பந்தர் வீதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் இரு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிய வந்துள்ளது.
அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கடும் சேதமடைந்தது. விபத்தை ஏற்படுத்திய இராணுவ வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.அது தொடர்பில் விசாரணை தொடர்கிறது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.