5 மாவட்டங்களுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை : மக்களே அவதானம் !

நாட்டில் தொடர்ச்­சி­யாக நில­வி­வரும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நாட்டின் ஐந்து மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

இரத்­தி­ன­புரி, கண்டி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளுக்கே இவ்­வாறு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, அங்கு மலைப்­பாங்­கான பிர­தே­சங்­களில் வாழும் மக்கள் அதிக மழை பெய்யும் சந்­தர்ப்­பங்­களின் போது மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­மாறும் கோரிக்கை விடுக்­கப்­ப­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இதனிடையே மழையுடனான காலநிலை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கால நிலை அவதான மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

warning