புதிய அரசியலமைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் வண.பெல்லன்வில விமலரதன தேரர்.
“புதிய அரசியலமைப்புக்கான எதிர்ப்புகள் இன்னும் அடங்காத நிலையில், அரசியலமைப்புப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டதாக அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் என்னிடம் தெரிவித்துள்ளார். மேலும், அரசியலமைப்பைத் தயார் செய்த இரண்டு பேரின் பெயர்களும் எனக்குத் தெரியவந்துள்ளது. அது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்” என்று தேரர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு வெகு விரைவில் பாராளுமன்றில் கையளிக்கப்படவுள்ளதோடு, பாராளுமன்ற உறுப்பினர்களை தவறான வழியில் அழைத்துச் சென்று புதிய அரசியலமைப்பை உறுதிசெய்யும் முனைப்பிலும் அரசாங்கம் இறங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள தேரர், அரசியலமைப்பை எதிர்க்கும் மதத் தலைவர்களை அவமானப்படுத்தும் சதித் திட்டம் ஒன்றும் தீட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.