9 ஆயிரம் ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஜன­வ­ரியில் இட­மாற்றம்!

தேசிய பாட­சா­லை­களில், ஒரே பாட­சா­லையில் சுமார் 10 வரு­டங்­க­ளுக்கும்  மேல் சேவை செய்த மேலும் 9 ஆயிரம் ஆசி­ரி­யர்கள்   2018ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதல் இட­மாற்றம் பெறுவர் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வா­சி­ரி­யர்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் கவனம்  செலுத்­தி­யுள்ளார்.

நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள 353 தேசிய பாட­சா­லை­களில், சுமார் 37 ஆயிரம் ஆசி­ரி­யர்கள் சேவை­யாற்றி வரு­கின்­றனர். இவர்­களில் 12 ஆயிரம் பேர் ஒரே பாட­சா­லையில், சுமார் 10 வரு­டங்­க­ளுக்கும் மேல் சேவை­யாற்­றி­யுள்­ளனர். இவ்­வா­றான ஆசி­ரி­யர்­களில் சுமார் 3 ஆயிரம் பேர் ஒக்­டோபர் 12 முதல் வேறு தேசிய பாட­சா­லை­க­ளுக்கு, கல்வி அமைச்­சினால் இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளனர்.

எஞ்­சி­யுள்ள சுமார் 9 ஆயிரம் ஆசி­ரி­யர்கள் 2018ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதல் இட­மாற்றம் செய்­யப்­ப­ட­வுள்­ளனர். அரசின் தேசிய ஆசி­ரியர் இட­மாற்றக் கொள்­கைக்­க­மை­வாக, ஆசி­ரியர் இட­மாற்ற சபையின் உத­வி­யுடன்  மாகாண மட்­டத்தில் இப்­பணி முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

தேசிய பாட­சா­லை­களில் சுமார் 10 வரு­டங்­க­ளுக்கும் மேல் ஒரே பாட­சா­லையில் கட­மை­யாற்றும் ஆசி­ரி­யர்­களை இட­மாற்றும் தேசிய திட்­டத்தின் கீழ், ஒரு தொகுதி ஆசி­ரி­யர்கள் கடந்த 2013ஆம் ஆண்டு, கல்வி அமைச்­சினால் இட­மாற்றம் செய்­யப்­பட்­டனர்.

அதன்­பின்னர், இவ்­வ­ருடம் சுமார் 3 ஆயிரம் ஆசி­ரி­யர்கள் இட­மாற்றம் பெற்­றுள்­ளனர். இட­மாற்றம் பெற்ற ஆசி­ரி­யர்கள் புதிய இட­மாற்றப் பாட­சா­லை­களில் கட­மை­யேற்று, அது­கு­றித்து அமைச்­சுக்கு அறிக்கை செய்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, நாட்­டி­லுள்ள தேசிய பாட­சா­லை­களில் கல்வி பயிலும் மாண­வர்­களின் விளை­யாட்டுச் செயற்­பா­டு­களை ஊக்­கு­விக்கும் நோக்­குடன், சுமார் 3 ஆயிரம் உடற்பயிற்சி ஆசிரியர் உதவியாளர்கள் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேற்கொண்டு வருகின்றார்.

201705282245430535_Nilgiris-district-247-police-transferred_SECVPF