இன்றைய ராசிபலன்
-
மேஷம்
மேஷம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக்கூடும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. புண்ணிய ஸ்தலங் கள் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
-
கடகம்
கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.
-
சிம்மம்
சிம்மம்: பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
-
கன்னி
கன்னி: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்க மாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
-
துலாம்
துலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய் வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக் கும். நன்மை கிட்டும் நாள்.
-
தனுசு
தனுசு: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். விவாதங்களில் வெற்றி
பெறுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள். -
மகரம்
மகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகு, இளமை கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
-
கும்பம்
கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து
போகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளி யிட வேண்டாம். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். சிக்கனம் தேவைப்படும் நாள். -
மீனம்
மீனம்: திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.