விக்ரமின் மகளுக்கு சில மாதங்களுக்கு முன் தான் நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மு.க.முத்து-சிவகாமசுந்தரியின் மகள் வழிப்பேரன் மனோரஞ்சித் தான் விக்ரமின் மருமகன்.
இவர்கள் நிச்சயத்தார்த்தம் பிரமாண்டமாக நடந்து முடிய, தற்போது இவர்கள் திருமணம் நவம்பர் 1-ம் தேதி கலைஞர் வீட்டில் நடக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
கலைஞர் முன்னின்று இந்த திருமணத்தை நடத்தி வைக்கவுள்ளாராம், பிறகு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வரவேற்பு நிகழ்வு நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.