கைதாகிறார் நடிகை அமலாபால்!

சிந்துசமவெளி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, மைனாவில் ஹிட்டடித்த நடிகை அமலா பால் கேரளவைச் சேர்ந்தவர்.

இவர் தொடர்ச்சியாக தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவரானார்.

கேரளத்தை சேர்ந்த அமலா பால், திரைக்கு வராத ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார்.

கேரளத்தை சேர்ந்த இவர் சென்னையில் ரூ. 1.12 கோடிக்கு எஸ். கிளாஸ் பென்ஸ் கார் வாங்கியதாகவும், இந்த கார் போலி முகவரி மூலம் புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கேரள வாகன சட்டப்படி அந்த மாநிலத்திலும் அமலாபால் முறைப்படி வரி செலுத்தவில்லை எனவும் செய்திகள் வெளியாகின்றன.

இந்த நிலையில் மேற்கண்ட குற்றமானது நிரூபிக்கப்பட்டால் 7 வருடம் வரை அமலா பாலுக்கு சிறைத்தண்டனை கிடைத்திடக்கூடுமெனவும் செய்திகள் வெளியாகின்றன.

NTLRG_151222221128000000