முஸ்லிம் இனத்துவேசிகளுக்கு ஒரு பாடம் புகட்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர்களை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியுடன் அணிதிரளுமாறு முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அழைப்புவிடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது தமிழர்களுக்கு தேவை பாதுகாப்பு அரசியலே தேசிய அரசியலைப் பேசி பேசி தமிழினம் அழியும் நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது கிழக்கின் நிலமை மேன் மேலும் மோசமடைந்து செல்கின்றது பெரும்பான்மை இனத்துடன் நாம் சேர்ந்து செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் எம் நிலமை மோசமடையும்என்பதை அனைத்து தமிழ் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
கதைக்கும் எந்த தமிழனும் இன்று மட்டக்களப்பானை காப்பாற்ற முன்வரவில்லை.
அதேபோன்றுதான் வருகின்ற பிரதேச சபைதேர்தலை காரணம் காட்டி இப்பவே பல்வேறு கூத்தாடிகள் படையெடுக்கதொடங்கிவிட்டார்கள்.
இவர்களின் ஆயுதம் தேசியம். இவர்களை நம்பி எம் உறவுகளே ஏமாற வேண்டாம்.
இவர்கள் தங்கள் பைகளை நிரப்புவதற்கும் வெறும் அதிகார மோகத்திலும்தான் இன்று உங்கள் முன் வருகின்றார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பிரதேச சபைதான் எங்கள் கிராமங்களை காப்பாற்றக்கூடிய அலகு என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இதை கூறுபோட நீங்கள் அனுமதித்தால் இழப்பை சந்திக்க போவது நீங்கள்தான்.
இன்று ஒரு பஸ்தரிப்பு இடத்தை கட்ட முடியாமல் நாம் தவிக்கின்றோம். பிரதேச சபை அதிகாரம் எங்களிடம் இருந்திருக்குமாக இருந்திருந்தால் அதை நாம் கட்டியிருக்கலாம். இதனால்தான் நான் அன்பாக எங்கள் இழைஞர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
பலர் இன்று சுயேட்சையா போட்டியிடுவதிற்கும் திட்டமிடுகின்றார்கள் இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியுடன் அணிதிரளுங்கள் தேர்தலுக்கான சிறந்த வியுகத்தை நாம் வைத்துள்ளோம்.
இது உங்களுக்கான கட்சி தமிழர்களை பாதுகாக்க உதயமான கட்சி இதில் எல்லோருக்கும் உரிமை இருக்கின்றது என்பதை நீங்கள் மறந்து விடவேண்டாம்.
எங்களுக்கு பதவி வேண்டாம் பட்டம் வேண்டாம் உங்களுக்காக உயிரை தருவதற்கு நாம் தயாரகவுள்ளோம் அனைவரும் அணி திரளுங்கள் முஸ்லிம் இனத்துவேசிகளுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் வாருங்கள்.