மரணச்சடங்கு இடம்பெற்று நல்லடக்கம் செய்வதற்காக சவப்பெட்டியில் வைப்பதற்காக சடலத்தை கொண்டுசென்ற வேளை, அந்த சடலம் திடீரென சுவாசிக்க ஆரம்பித்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய சம்பவம் பெருவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
வட்ஸன் பிராங்ளின் மன்துஜனோ என்றகுறிப்பிட்ட 24 வயது இளைஞர் இறந்துவிட்டதாக திங்கோ மரியா பிராந்திய மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக சவப்பெட்டியில் வைப்பதற்காக தூக்கிச் செல்லப்பட்டது.
இதன்போதே அவர் சுவாசிப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிருடன் உள்ள ஒருவரை இறந்து விட்டதாக அறிவித்து அவர் உரிய சிகிச்சையை பெற முடியாது செய்து அவரது மரணத்திற்கு காரணமாகவிருந்த அந்த மருத்துவமனை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.