விமானத்தில் தனி ஒருவராக பயணித்த பெண்ணுக்கு விமான ஊழியர்கள் ராஜ மரியாதை அளித்து கெளரவித்துள்ளனர்.
ஸ்காட்லாந்தை சேர்ந்த Karon Grieve (57) என்ற பெண் சில தினங்களுக்கு முன்னர் கிரீஸ் நாட்டின் ஹெராக்லியன் நகருக்கு விமானத்தில் பயணம் செய்ய கிளாஸ்குளோ விமான நிலையத்துக்கு வந்தார்.
189 பேர் அமரக்கூடிய ஜெட் ரக விமானத்தில் பயணம் செய்ய Karon உட்பட மூன்று பேர் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர்.
ஆனால் பயண நேரத்தின் போது Karon மட்டும் அங்கு வர மற்ற இருவர் வரவில்லை. இதையடுத்து தனி ஆளாக Karon விமானத்தில் பயணம் செய்தார்.
விமானத்தில் இருந்த ஊழியர்கள் அவருக்கு முக்கிய பிரமுகர்களுக்கு தரும் ராஜ மரியாதையை கொடுத்தனர்.
உணவு இலவசமாக வழங்கபட்டதுடன், விமானத்தில் உள்ள எந்த இருக்கையில் வேண்டுமானலும் உட்கார்ந்து கொள்ள Karon-னுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.
விமானம் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அவர் தனது உடமைகளை ஊழியர்களிடம் கொடுக்க, விமான நிலையத்தில் Karon காக்க வைக்கபடாமல் உடனடியாக அனுப்பட்டார்.
விமானத்தில் பயணம் செய்த நாள் முழுவதும் முக்கிய பிரமுகர் போல தான் உணர்ந்ததாக Karon மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.