விஜய்யை வைத்து படம் எடுத்தா நடு ரோட்டுலதான் நிக்கனும் – ஆர்த்தி

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இடத்தில் இருப்பவர் விஜய். சமீபத்தில் வெளிவந்த மெர்சல் படம் தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.

அரசயலல-நடககத-தரயததல-அதமகவல-இரநத-வலககறன-நடக-ஆரதத1இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஆர்த்தியுடன் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் மோதி வருகின்றனர்.

ஆர்த்தி அஜித்தின் தீவிர ரசிகை என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம் என்பதால் இந்த மோதலில் ஆச்சர்யம் எதுவும் இல்லை என்றாலும், அவர் விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக பல்வேறு ட்விட்களில் விஜய்யை விமர்சித்துள்ளார்.

“சுறா படம் பார்த்த பிறகு நான் அஜித் ரசிகை ஆகிவிட்டேன்”, “அஜித்தால் எந்த தயாரிப்பாளருக்கும் நஷ்டமில்லை ஆனால் உங்களை வைத்து எடுத்த பல தயாரிப்பாளர்கள் எங்கனே தெரியல..” என பல்வேறு ட்விட்களில் ஆர்த்தி விஜய்யை நேரடியாகவே விமர்சித்துள்ளார்.