சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு கனமழை.. வானிலை மையம்!

சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு கனமழை.. வானிலை மையம்!

24-mumbai-rain13-600-jpgதமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதே போன்று தமிழக கடலோர மாவட்டங்களிலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கை பகுதியில் நீடிக்கிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் இயக்குநர் தெரிவித்துள்ளார்.