சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

raine

சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனையடுத்து சென்னை மாநகராட்சி முன்கூட்டியே சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த 2015ம் ஆண்டு சென்னை பெருவெள்ளம் வந்தபோது பல சுரங்கப்பாதைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது.

அது போன்று மறுபடியும் நிகழாமல் இருப்பதற்காக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முன்கூட்டியே நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.