சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையின் பல முக்கிய பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே மையம் கொண்டு இருந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யும். உள்மாவட்டங்களில் மிதமான முதல் கன மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.