முன் வைத்த காலை பின் வைக்கும் பழக்கம் எனக்கு இல்லை…- செங்கோட்டையன்

தான் எப்போதும் அரசியலில் பச்சோந்தியாக செயல்பட்டதில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள மொடச்சூரில் தமிழக அரசு சார்பில் புதிதாக பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டது.

இந்தநிலையில், புதிய கட்டிட திறப்பு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உட்பட ஆசியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டார்.

sengottaiyan_11023கட்டிடத்திறப்பு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தான் எப்போதும் அரசியலில் பச்சோந்தியாக செயல்பட்டதில்லை என்றும், என்னை சிலர் அவ்வாறு கூறியிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.