மூட்டுவலி முற்றிலும் சரி செய்யும் அற்புத மருத்துவம் தெரியுமா?

இன்றைய சூழ்நிலையில் பலரும் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது வீடுகளிலேயே ஒருவர் அல்லது இரண்டு பேர் மூட்டு வலியால்பா திக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது. இந்த மூட்டுவலிக்கு பல மருந்துகள், பல மருத்துவர்களை பார்த்து பலருக்கு மூட்டு வலி அதிகமானது தான் மிச்சமானதாக இருக்கும். ஆனால் இந்த மூட்டு வலிக்கு இயற்கையிலே மிகச்சிறந்த மருந்து உள்ளது. இதனை பயன்படுத்திப்பாருங்கள். நிச்சயம், எந்த ஒரு பக்கவிளைவுகளும் இன்றி மூட்டுவலி குணமாகும்.
201609290812436267_joint-pain-For-relief_SECVPF
முடக்கத்தான் கீரை :
இந்தியாவில், 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில், இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை. நம் முன்னோர்கள், 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை, நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை.

என்ன செய்கிறது :
முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை, இந்திய ஆராய்ச்சியாளர் குழுவினரும், ஆஸ்திரேலிய பல்கலை ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டுபிடித்தனர். இதன் சிறப்புக் குணம், நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து, சிறுநீரகத்துக்கு எடுத்துச்சென்று விடும்.

உடல் சோர்வு இல்லை !
இது சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை நம் உடலில் விட்டு செல்கிறது. இது ஒரு மிக முக்கியமான மாற்றத்தை, நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை.

சட்னி அல்லது துவையல் :
முடக்கத்தான் இலைகளை நெய்யில் வதக்கி, இஞ்சி, கொத்தமல்லி, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சட்னி அல்லது துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

முடக்கத்தான் தோசை :
முடக்கத்தான் கீரையை கொண்டு தோசை செய்யலாம். முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிடலாம். கீரையை கொதிக்க வைத்து உண்ணக் சாப்பிட கூடாது. கொதிக்க வைத்தால் மருத்துவ சத்துக்கள் அழிந்து விடும். மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். தமிழக கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இக்கீரை படர்ந்து கிடக்கும்.

எண்ணெய் :
முடக்கத்தான் கீரையை எண்ணெய்யில் இட்டு காய்ச்சி மூட்டு வலிக்கு பூசினால் மூட்டு வலி விரைவில் குணமாகும்.

பிற பயன்கள் ;
முடக்கத்தான் கீரையை சமைத்து சாப்பிட்டால், கீல் பிடிப்பு, கீல் வாதம், கால்களை நீண்ட, மடக்க முடியாமல் இருப்பது, நடக்க முடியாமல் இருப்பது போன்றவை குணமாகும்.