இங்கிலாந்து இளவரசர் ஜார்ஜ்! ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொலைப் பட்டியலில்!

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மகன் இளவரசர் ஜார்ஜுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

princeஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து பல தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அவ்வப்போது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படுகிறது

இந்த நிலையில் இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் 4 வயது மகன் இளவரசர் ஜார்ஜ் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொலைப் பட்டியலில் இருக்கிறார் என்று இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக தெற்கு லண்டனில் இளவரசர் ஜார்ஜ் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இளவரசர் வில்லியம் தானே தன் மகன் ஜார்ஜ்ஜை தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.