இன்றைய ராசிபலன் (31.10.2017)

இன்றைய ராசிபலன்

  • மேஷம்

    மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ் வீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும்.  உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சிறப்பான நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: திட்டமிட்ட காரியங் களை சிறப்பாக முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச் னையை தீர்த்து வைப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோ கத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும்  நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள்வீர் கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வாகன வசதிபெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.

  • கடகம்

    கடகம்: இரவு 11.35 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக் காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. பிள்ளைகளிடம் எதிர் மறையாக பேசாதீர்கள். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத் தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

  • சிம்மம்

    சிம்மம்:  கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக் கும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். இரவு 11.35  மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

  • கன்னி

    கன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.  பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதி காரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.  தொட்டது துலங்கும் நாள்.

  • துலாம்

    துலாம்:  மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர் களில் உண்மையானவர் களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டா ரின் ஆதரவு பெருகும். கடையை விரிவு படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்:  சகோதர வகை யில் நன்மை உண்டு. அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர் கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்  கொள்வீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும்.  எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • தனுசு

    தனுசு:  குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வீடு, மனை வாங்குவது, விற் பது லாபகரமாக அமையும். உறவினர்கள் வீடு தேடி வரு  வார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர் வாகத்திறமை வெளிப்படும். வெற்றி பெறும் நாள்.

  • மகரம்

    மகரம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னை ஒன்று தீரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து  முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

  • கும்பம்

    கும்பம்:  இரவு 11.35 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலர் உங்களிடம் நயமா
    கப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண் டாம். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

  • மீனம்

    மீனம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம்,  எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்பு கள் கூடும். இரவு 11.35 மணி முதல் ராசிக்குள் சந்திரன்  நுழைவதால் கவனம் தேவைப்படும் நாள்.