பிரபல நடிகரான ராஜ சேகர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். ஆனால் பல தெலுங்கு படங்களில் நடித்ததோடு அங்கேயே செட்டிலாகி விட்டார். நடிகை ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
1980 களில் இவர் நடிப்பில் பல படங்கள் . ஆனால் சில வருட காலமாக ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வந்தார். இவர் தற்போது நடித்துள்ள கருடா வேகா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொடண்டவர் எனது படங்களில் இதுவரை அதிக பேர் பார்த்த டீசர் இதுதான். 50 லட்சம் பேர் இதை பார்த்திருக்கிறார்கள் என்னும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது.
சினிமாவில் படங்கள் தயாரிப்பில் நான் பல கோடிகளை இழந்திருக்கிறேன். சென்னையில் இருந்த சில சொத்துக்களை விற்றுவிட்டேன். அது இப்போது இருந்திருந்தால் ரூ 200 கோடிக்கு அதிபதியாகியிருப்பேன் என கண்ணீர் விட்டு அழுதார்.
சில நாட்களுக்கு முன் தான் இவரின் அம்மா இறந்துபோனார். அந்த துக்கம் இன்னும் மாறாத நிலையில் விழாவில் இவர் மனம் விட்டு பேசி அழுதது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பக்கத்தில் இருந்த அவரது மனைவி ஆறுதல் கூறினார்.