யாழில் மனைவியுடன் முறையற்ற உறவு வைத்திருந்த நபருக்கு நேர்ந்த கதி! கணவன் கைது

யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் மனைவியுடன் முறையற்ற உறவு வைத்துக் கொண்ட நபர் ஒருவர் கணவரால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மனைவியுடன், முறையற்ற உறவு வைத்துக் கொண்டதால் குறித்த பெண்ணின் கணவன் நேற்றைய தினம்(29) தாக்குதல் நடத்தியுள்ளார்.

621491834arrested-by-policeஇதனால், படுகாயமடைந்த குறித்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, தாக்குதல் நடத்திய பெண்ணின் கணவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.