தளபதி விஜய் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் மெர்சல் படம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று, வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.
இந்த நிலையில் மெர்சல் படத்திற்கு திருப்போரூரில் உள்ள ராஜீவ் காந்தி சாலையில் 40 அடிக்கு மேல் ஒரு கட்-அவுட் வைத்துள்ளனர்.
அந்த கட்-அவுட் இன்று கீழே விழ, அந்த வழியாக சென்ற ஒருவருக்கு தலையில் அடிப்பட்டுள்ளது.
இதுக்குறித்து அந்த பகுதி போலிஸாரிடம் கேட்க, ‘நாங்கள் இதற்கு ஒரு போதும் அனுமதி வழங்கவில்லை, இது தொடர்பாக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்’ தெரிவித்துள்ளனர்.