என் மகள் தற்கொலை செய்யவில்லை, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை ! அம்மா திடுக்கிடும் தகவல்!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து முகம் தெரிந்த நடிகையானவர் பிரதியுஷா. மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி என சில படங்களில் நடித்திருந்தவர். தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகையான இவர் கடந்த 2002 ம் ஆண்டு தன் காதலருடன் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியானது.

ஆனால் அவரது காதலன் உயிர்பிழைத்து விட்டார். இதன் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அவரின் அம்மா நேற்று முன் தினம் ஹைதராபாத்தில் பேட்டியளித்துள்ளார்.

02-1459566501-prathyusha-banarjee2-600இதில் என் மகள் தற்கொலைசெய்யவில்லை. விஷமும் குடிக்கவில்லை. அவளை நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு அவளின் வாயில் விஷத்தை தடவியுள்ளனர். நாடகம் நடந்துள்ளது.

அதற்கான காயங்கள், நகக்கீரல்கள் அவளின் உடல் முழுவதும் இருந்தது. ஆனால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள் என வழக்கை முடித்துவிடுவார்கள். குற்றவாளிகள் விடுதலையாவார்கள்.

ஆண்டவன் இருக்கிறான். அவர்களை தண்டிப்பான். மகளின் இறப்பால் மகனும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளான். 15 வருடமாக தீர்ப்பு கிடைக்கும் என போராடிவரும் எனக்கு ஆதரவில்லை என பிரதியுஷாவின் அம்மா கதறி அழுதுள்ளார்.