பா.ஜ.க மோதல்: தன்னாட்சி காங்கிரஸ், என்ன சொல்கிறார்கள் தமிழர்கள்?

காஷ்மீர் மக்களின் தன்னாட்சி கோரிக்கையைப் பரிசீலிக்கலாம் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதற்கு, பிரிவினைவாதிகளின் மொழியில் பேசுகிறது காங்கிரஸ் எனப் பிரதமர் நரேந்திர மோதி எதிர்வினை ஆற்றி இருந்தார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து பதிவு செய்யுமாறு, பிபிசியின் சமூக வலைத்தள நேயர்களிடம் கேட்டிருந்தோம். நேயர்கள் கூறியவற்றில் நேர்ந்தேடுக்கப்பட்ட கருத்துக்கள் இங்கே..

Capturehfcd
“காஷ்மீர் மக்களையும்,பிரிவினை வாதிகளையும் பிரித்து பார்க்க வேண்டும்.ராணுவத்தை வாபஸ் வாங்க வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.கூடுதல் அதிகாரம் தரவேண்டும்.அடக்குமுறை சிறிதும் உதவாது” என அப்துல் ரஹீம் கூறியிருக்கிறார்.

“பல ஆண்டுகளாக காங்கிரஸ் தான் ஆட்சியிலிருந்தது. அப்போது செய்திருக்கலாமே” எனக் கோபி பதிவிட்டுள்ளார்.

“அந்த மாநில மக்கள் வாக்கு முறையில் நல்ல தீர்வு சொல்லலாம். அம்மக்களின் முடிவுக்கு இந்தியா துணை நிற்கலாம்.” என மைதீன் கூறுகிறார்.

“அந்த மக்களின் கோரிக்கை தன்னாட்சிதான் என்றால் கொடுப்பதுதான் சரி. அதை விட்டுவிட்டு அவர்கள் மீது அடக்குமுறையைக் கையாள்வது மேலும் சிக்கலை உருவாக்கும்.” என செல்வகுமார் கூறியுள்ளார்.

“ஈழத்தில் தன்னாட்சி வழங்கிவிட்டு பிறகு காங்கிரஸ் காஷ்மீர் பற்றி பேசட்டும்” என தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

“காஷ்மீரின் பாதுகாப்பு செலவு பல நூறு கோடிகள். எத்தனை ஆண்டுகள். அப்பப்பா…கணக்குப் போட்டால் தலைச் சுற்றும்.” இஷான் கூறியுள்ளார்.

“நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு காங்கிரஸ் துணை போகிறது” என கருப்பையா கூறுகிறார்.

“தன்னாட்சி கொடுப்பது தவறு, அண்டை நாடுகள் காஷ்மீரை ஆக்கிரமிக்கும் வாய்ப்பு இருக்கிறது” என சந்தோஷ் கூறியுள்ளார்.