இலங்கை தொடரூந்து திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற, பொதிப் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி , எதிர்வரும் மாதம் முதலாம் திகதி தொடக்கம் தொடரூந்து பொதிப் போக்குவரத்து கட்டணம் நூற்றுக்கு 50 வீதத்தில் அதிகரிக்கப்படவுள்ளது.
அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமையவே, இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் என்.ஜே. திபொலகே தெரிவித்திருந்தார்.