நீதிபதிகள் குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த யானை!!

சித்துல்பவ்வ விகாரைக்கு செல்லும் பக்தர்களிடம் உணவு கப்பமாக பெற்றுக் கொள்ளும் யானை ஒன்று பதில் நீதவான் ஜயம்பதி ரத்னதிவாகர உட்பட குடும்பத்தினரை சுற்றிவளைத்துள்ளது.

அந்த அதிர்ச்சி சம்பவத்தை பேருந்தில் சென்ற ஒருவர் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

625.200.560.350.160.300.053.800.300.160.90 (1)சொகுசு பேருந்தில் கதிர்காமம் சென்று சென்று பின்னர் சித்துல்பவ்வ விகாரைக்கு செல்லும் போது நீதவான் உட்பட குடும்பத்தினர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறித்த யானை உணவு கோரி பேருந்திற்கு அருகில் வந்துள்ளது. உணவு வழங்காமையினால் கோபமடைந்த யானை பேருந்தின் கண்ணாடியை உடைத்து தும்பிக்கையை பேருந்தினுள் செலுத்தி உணவு தேடியுள்ளது.

உணவு கிடைக்காமையினால் தலையை உள்ளே விட்டு அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பின்னர் பேருந்தில் இருந்த குழுவினர் உணவு பொதி ஒன்றை யானையிடம் வழங்கி அங்கிருந்து தப்பித்துள்ளதாக கூறப்படுகின்றது .