ஸ்பாட்டில் வைத்தே தூக்கப்பட்டாரா ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி..?

ஐ.ஏ.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளில் 985 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 18 -ம் தேதி நடைபெற்றது.

Capturefgdfsvgfgமுதல்நிலைத் தேர்வில் 13,350 பேர் முக்கிய தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். இந்த முக்கிய தேர்வு அக்டோபர் 28 முதல் நவம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.

அந்த அறிவிப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டில் சென்னை உட்பட நாடு முழுவதும் 24 முக்கிய நகரங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து சென்னையில், நடைபெற்றுவரும் ஐஏஎஸ் தேர்வில் ஐ.பி.எஸ் அதிகாரி சபீஸ் கபீர் என்பவர் ப்ளூடூத் மூலம் வினாக்களுக்கு பதில் கேட்டு தேர்வு எழுதியுள்ளார்.

இதைக் கண்டறிந்த போலீசார் சபீர் கபீரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரி கபீருக்கு ஐதராபாத்திலிருந்து உதவிய மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தேர்வில் ப்ளூடூத் மூலம் காப்பியடிக்க உதவியதாக, அவரது மனைவி ஜாய்சி ஜோசியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர்களிடமிருந்து ப்ளூடூத், செல்போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளது.