வவுனியாவில் இன்று காலை முதல் அதிகளவிலான பொலிஸார்கு விக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா பள்ளிவாசலுக்கருகாமையில் உள்ள சட்டவிரோத கடைகளை அகற்றக் கோரி இளைஞர்கள் சிலரால் இன்று அங்கு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலேயே பாதுகாப்பு பலப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால், பிரதேசத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் அச்சத்துடன் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.