மத்திய உளவுத்துறை எடுத்துள்ள ரகசிய சர்வே ரிப்போர்ட்டை பார்த்த எடப்பாடி அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியலில் நிலவி வரும் இக்கட்டான சூழல் குறித்து, மத்திய உளவுத் துறை அதிகாரிகள், மத்திய அதிகாரிகளுக்கு ரிப்போர்ட் அனுப்பி உள்ளனர்.
அந்த ரிப்போர்ட்டில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, உளவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
அரசியலில் அசாதாரண சூழலில் நிலவும் போது, டெல்லி மேலிடத்திற்கு தகவல் அளிப்பதற்காக மக்களை சந்தித்து உளவுத் துறை அதிகாரிகள் தகவல்கள் திரட்டுவார்கள்.
சில நேரங்களில், அரசின் செயல்பாடுகள் குறித்து மக்களின் மனநிலையை அறிவதற்காக, கருத்து கணிப்பு போன்று கேள்வி கேட்டு தகவல்களை பெறுவார்கள்.
அப்படி பெறப்படும் தகவல்களை டெல்லி மேலிடத்திற்கு ரிப்போர்ட்டாக அனுப்புவார்கள்.
அது போன்று சமீபத்தில், தமிழகத்திலும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள், அவசர கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளனர்.
அந்த கருத்துக் கணிப்பில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
அதன் படி, தமிழக முதல்வர் எடப்பாடி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக அந்த ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.
அதனோடு தினகரன் செயல்பாடுகள் மீதும் மக்கள் கடும் அதிருப்தியில் தெரிவித்துள்ளனர்.
90 சதவீதம் பேர் எடப்பாடி, தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதே போன்று, ஆளும் கட்சியான அதிமுக மீதும் அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
மீண்டும் அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என்று 85 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
அதனோடு, திமுக மீதும் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
தூய்மையான எண்ணத்தோடு அரசியலுக்கு வரும் நபரை ஆதரிக்க தயாராக இருப்பதாக பெரும்பலான மக்கள் தெரிவித்துள்னர் என்று உளவுத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறையின் இந்த ரிப்போர்ட்டை பார்த்த எடப்பாடி அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.