பிரதமர் மோடியை அவதூராக பேசி பதிவுகள் வெளியிட்டு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தைச்சேர்ந்த விஜய் ரசிகர் திருமுருகன் என்பவர் போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கபட்டார்.
முன்னர் பெண் பத்திரிக்கையாளர் தன்யா அவர்களை அசிங்கமாக திட்டி பதிவிட்ட காரணத்திற்கு விஜய் ரசிகர் ராம்குமார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இன்னும் அவருக்கு பெயில் கிடைக்கவில்லை.
தமிழிசையை அவர்களை அவதூராக பேசிய காரணத்திற்கு போலீஸ் சில விஜய் ரசிகர்களை தேடி வருவதாக செய்திகள் வருகின்றன.
ரசிகர்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். பெரிய ஆள் பலம் எல்லாம் உங்களுக்கு கிடையாது.
உங்கள் அம்மா அப்பா 2மாதம் ஜெயிலுக்கும் வீட்டுக்குள் அலைந்தால் தான் அதன் வேதனை புரியும். பெயில் கிடைக்காமல் நாலு பேரிடம் உங்கள் தாய், தந்தை கெஞ்சும் நேரத்தில் பல ஆயிரம் கோடி சொத்துகளில் வசதியாக அந்த தலைவனின் தாய் தந்தை சொகுசாக இருப்பர்.
25 கோடி வாங்கும் உங்கள் தலைவன் 20 ஆயிரம் ரூபாய் பெயிலுக்கு கூட உங்களுக்கு கொடுக்க போவது இல்லை.
எதார்தம் புரிந்து கொள்ளுங்கள். கொஞ்சமாது அறிவுடன் செயல்படுங்கள். சினிமா வேறு உண்மை வேறு.
இன்று வரை ஒரு சினிமா நடிகர் கூட தன் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்ய வேண்டாம் என்று கூறியது கிடையாது.
அதுவும் தற்போது இருக்கும் சோஷியல் மீடியாவின் வசதியில், தாக்கத்தில் நிஜமாகவே ரசிகர்கள் மேல் அக்கறை இருந்தால் இந்த கேவலமான அபத்தங்களை அவர்கள் ரசிக்கவில்லை என்றால் மிகவும் சுலபமாக இதைத் தடுக்கலாம்.
ஆனால் ஒருவருமே அப்படிச் செய்ததில்லை. இனிமேலும் செய்ய மாட்டார்கள. ஏனென்றால் அவர்கள் அனைவருமே பொய், மாயை உலகைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கு மாயையும், பொய்யும், மிகைப்படுத்தலும், புகழும், அபத்தங்களும் மண்டைக்கு ஏறி உள்ளது.
ஆகவே நாம்தான் நம் குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு இவர்களைப் பற்றிய உண்மையை புரிய வைக்க வேண்டும்.
நாளைய லட்சியம் இல்லா விட்டில் பூச்சிகள். என்றாவது ஒருநாள் நூறு ரூபாய்க்கு தவிக்கும் போது தெறியும்.எவ்வளவு பணத்தை நடிகனுக்காக வீணாக செலவு செய்தோமே என்று.