யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் சாவகச்சேரி மாவட்ட நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் ஆகியோருக்கு உலக இளம் பௌத்த சங்க பேரவை விசேட கௌரவம் வழங்கிப் பாராட்டியுள்ளது.
இரு நீதிபதிகளின் சேவைகளை பாராட்டி விசேட நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன. அஸ்கிரிபீட மகாநாயக்கர் அதிசங்கைக்குரிய வறக்காகொட ஞானரத்ன தேரர் இந்த நினைவுச் சின்னங்களை திரு.இளஞ்செழியன் மற்றும் ஸ்ரீநிதி நந்தசேகரன் ஆகியோருக்கு வழங்கி வைத்தார்.
இன, மத, மொழி வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து சமூகங்களுக்கும் சிறந்த சேவையாற்றி முன்மாதிரியாக திகழ்ந்த நீதிபதிகளுக்கு இங்கு கௌரவம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் சமாதானத்தை மேம்படுத்த இத்தகைய நீதிபதிகளின் சேவை மிக அவசியம் என்று தேரர் குறிப்பிட்டார்.உலக இளைஞர் பௌத்த சங்க பேரவையின் 14வது மாநாடு கண்டி பல்லேகல மாகாண சபை கூடத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது நீதிபதிகளான இளஞ்செழியன் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோருக்கு அஸ்கிரி பீட மாநாயக்கர் அதிசங்கைக்குரிய வறக்காகொட ஞானரத்ன கௌரவம் அளித்துள்ளார் .