கொழும்பில் அமெரிக்க இராஜதந்திர அதிகாரி ஒருவர் இரவு நேர விடுதிக்கு சென்ற நிலையில் வீதியில் வீழ்ந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி கொள்ளுப்பிட்டி மயில் போஸ்ட் எவினிவில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கும் இராஜதந்திர நடவடிக்கைக்காகவும் வருகைத்தந்துள்ள அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பலின் அதிகாரி ஒருவரே இவ்வாறு விழுந்து கிடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரவு விடுதிக்கு சென்ற அவர் அதிக மதுபானம் அருந்திய நிலையில் இன்று காலை இவ்வாறு விழுந்து கிடந்துள்ளார் என பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசாரணை கொள்ளுப்பிட்டிய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனினும் இந்த அதிகாரிக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது அவர் அதிக மதுபானம் அருந்தியுள்ளாரா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.