குருநாகல் சர்வதேச பாடசாலையில் பேய்கள்!! அலறியடிக்கும் மாணவர்கள்!!

குருணாகலில் செயற்படும் சர்வதேச பாடசாலை நிர்வாகத்தின் செயற்பாடு காரணமாக குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

tamil_ghost_600_14408அந்தப் பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலையில் தமது பிள்ளைகளை அனுமதித்த பெற்றோர் பாரிய சிக்கல் ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

பழைய வீடு ஒன்றில் நடத்தி செல்லப்படுகின்ற இந்த சர்வதேச பாடசாலையின் அனைத்து ஜன்னல் மற்றும் கதவுகளை முடிவிட்டு, ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பேய் படம் ஒன்று காட்டப்பட்டுள்ளது.

பெரியவர்கள் உட்பட அச்சமடையும் படத்தை சிறுவர்களுக்கு காட்டியுள்ளமையினால் இந்த மாணவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அச்சமடைவதாக அவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மன ரீதியான தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமையினால் குறித்த மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல மறுப்பதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.வெளிநாடுகளில் கொண்டாடப்படும் பேய்கள் தினத்தினை முன்னிட்டு, குறித்த பாடசாலையில் பேய்ப் படம் மாணவர்களுக்கு காட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கலாச்சாரத்திற்கு அமைய இலங்கையிலும் அதனை திணித்தமையினால் மாணவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியுள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.