பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தவர் ரைசா. அதுபோல், ஹரிஷ் கல்யாணும் இந்நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமாகி இருக்கிறார். இவர்கள் இருவரும் பிக்பாஸ் இல்லத்தில் நல்ல நண்பர்களாக இருந்த நிலையில், தற்போது இருவரும் திரையில் ஜோடியாகி உள்ளனர்.
ஹரிஷ் மற்றும் ரைசா இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இவர்கள் நடிக்கும் படத்தை இளன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ‘கிரகணம்’ என்ற திகில் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல், காமெடி படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.