திருச்சி வடக்கு காட்டூர் எம்.ஜி.ஆர். ராஜவீதியை சேர்ந்த சுசீலா. கைகுழந்தையுடன் இவர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது.
நான் அரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு டியூசன் சென்டரில் டைப்பிஸ்ட் ஆக பணியாற்றி வந்தேன்.
இந்நிலையில் அந்த டியூசன் உரிமையாளர் அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கொடுத்து கற்பழித்தார்.
இது பற்றி அவரிடம் கேட்ட போது உன்னை இரண்டாவது மனைவியாக வைத்துகொள்கிறேன் என கூறினார்.
மேலும் நான் மயக்கமாக இருந்த போது என்னை நிர்வாணமாக போட்டோ எடுத்து இணையத்தில் போட்டுவிடுவேன் என மிரட்டி பலமுறை உல்லாசம் அனுபவித்தார்.
இதனால் கர்ப்பமான நான் தற்போது ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளேன்.
அவருடன் சேர்ந்து வாழ முயன்ற போது அவரது உறவினர்கள் கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்கள்.
எனவே அந்த டியூசன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார்.
கைக்குழந்தையுடன் வந்து பெண் மனு கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.