புதுவை உழவர்கரை அந்தோணியார் கோவில் வீதியை சேர்ந்தவர் சோனால் சீசர்.
ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி முனியன் என்பவரது மகள் ஹிமாஜாவை இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு சோனால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் இவருடைய மனைவி அவர் தாயார் வீட்டில் இருந்து பணம் வாங்கி வந்துள்ளார்.
அவரது தந்தை தன் பணியில் இருந்து ஈய்வு பெற்றதால் அவருக்கு செட்டில்மெண்ட் பணம் வந்தது.
இதில் தனக்கு குறிப்பிட்ட தொகையை ஹிமாஜா கேட்டுள்ளார். ஆனால் அவரது தாய் அவசரபடாமல் இரு என கூறியுள்ளார்.
இதனால் ஹிமாஜாவுக்கும் அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
தொடர் பிரச்சனைகளால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஹிமாஜா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது அறையில் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.
அதில் தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் குழந்தையை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்றும் உருக்கமாக எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.