வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில், ஒரே நேரத்தில் 1069 ரோபோக்களை நடனமாடவைத்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
இது குறித்து விஞ்ஞானிகள் தெரிவிக்கையில், உலகமே வடகொரியாவை பார்த்து அஞ்சும் வேளையில், தாம் ரோபோக்களை பார்த்து அஞ்சுவதாகவும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ரோபோக்கள், மனிதர்களின் வேலைகளை பறிக்கும் சக்தி கொண்டவை எனவும் தெரிவித்துள்ளர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சீனாவில், ஆயிரத்து ஏழு ரோபோக்கள் ஒரே மாதிரி நடனமாடியதே சாதனையாக உள்ளது. தற்போது, அதனை வடகொரியா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.