இந்தியா- நியூஸிலாந்து T-20 தொடர் நாளை ஆரம்பம்

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ரி-ருவென்ரி தொடர் நாளை (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

dhawan-640-nz-out-720x450தொடரின் முதல் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 2:1 என்ற ரீதியில் கைப்பற்றிய இந்திய அணி ரி-ருவென்ரி தொடரையும் கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இவ்வாறிருக்க ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடிய வீரர்களே ரி-ருவென்ரி தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறுவர் என்றும் கூறப்படுகின்றது.

அதேபோன்று ஒருநாள் போட்டித் தொடரை இழந்த நியூஸிலாந்து ரி-ருவென்ரி தொடரையாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் நாளைய போட்டியில் களமிறங்கும்.

நியூஸிலாந்து அணியில் அணித்தலைவர் வில்லியம்ஸன், லாதம், ரோஸ் டெய்லர், குப்தில் போன்ற சிறந்த துடுப்பாட்ட வீரர்களும் போல்ட், சவுத்தி, மிலின் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ள நிலையில் வெற்றி சாத்தியமாக கருதப்படுகின்றது.