வடகொரிய அணு ஆயுத சோதனை மையத்தில் விபத்து! 200 பேர் பலி

கடந்த மாதம் வடகொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதனை செய்துமுடித்த பின் பியாங்யாங்கி அணு ஆயுத சோதனை மையத்தில் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டது.

இதில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

vmw4awzbmgokhmcxm5lbஇந்த சம்பவம் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற போதும் இன்றைய தினமே செய்தி வெளியாகியுள்ளது.

விபத்து நேரிட்ட சந்தர்ப்பத்தில் 100 பணியாளர்கள் பலியாகினர். பின்னர் மீட்பு பணிகள் நடைபெற்றது, அப்போதும் விபத்து நேரிட்டு உள்ளது.

இச்சம்பவங்களில் 200க்கும் அதிமானோர் பலியாகி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வடகொரியா 100 கிலோ டொன் எடை கொண்ட ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதனை செய்து உள்ளது.

இதனால் வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனை கூடமே பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது.

தொடர்ச்சியாக வடகொரியா அணு ஆயுதம் மற்றும் வெடிகுண்டுகளை சோதனை செய்ததன் காரணமாக பரிசோதனை கூடம் பலவீனமாகி உள்ளது எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.