இன்றைய ராசிபலன் (01.11.2017)

இன்றைய ராசிபலன்

  • மேஷம்

    மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர் கள். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலா வதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவு வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுக மாவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். புகழ், கௌரவம், கூடும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: எதிர்பார்புகள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசு வார்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது  ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • கடகம்

    கடகம்: கடந்த இரண்டு நாட்களாக தடைப்பட்ட வேலை களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக்  கொள்வார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத் தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை குறையும். உத்யோ கத்தில் மறதியால் பிரச்னைகள் வரக் கூடும். பொறுமைத்  தேவைப்படும் நாள்.

  • கன்னி

    கன்னி: சவாலான விஷயங் களையும்சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரங்கள் சாதகமாக இருப்பார் கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோ கத்தில் அதிகாரிகள் வலிய  வந்து உதவு வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • துலாம்

    துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் அனு கூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள்  அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது  துலங்கும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்:  புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்யோகத்தில் எதிர் பார்த்த சலுகைகள் கிடைக்கும்.  புதுமை படைக்கும் நாள்.

  • தனுசு

    தனுசு:  முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல  வரன் அமையும். வியாபா ரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • மகரம்

    மகரம்:  தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.  வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோம்பல் நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.  கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும் உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப் பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.

  • மீனம்

    மீனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் புதிய முயற்சி கள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். உத்திரட்டாதி  நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களால்  பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.