எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட வடக்கின் தமிழ் தலைவர்கள் ஒன்றையாட்சி மற்றும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமைய உள்ளிட்ட விடயங்களுக்கு இணக்கம் வெளியிட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரலாற்றில் சிறப்பான சந்தர்ப்பத்தை அடைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் அமைப்பு நடவடிக்கை குழுவின் இடைக்கால அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “தனி நாட்டு கோரிக்கையிலிருந்து இன்று ஒன்றையாட்சிக்கு இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை என்ற விடயத்திற்கும் வடக்கில் உள்ள தமிழ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது வரலாற்றில் சிறப்பான சந்தர்ப்பமாகும்.
இதனை நாங்கள் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறான நிலையில் புதிய அரசியல் அமைப்பு வேண்டாம் என கூறுவது சிறந்த ஒன்றல்ல” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.