பிரான்சில் மனைவி மற்றும் பிள்ளைகளை சுட்டு, தானும் தற்கொலை!

பிரான்சின் பண்ணை வீடொன்றில் மனைவி மற்றும் 3 பிள்ளைகளை சுட்டுக்கொன்ற தந்தை ஒருவர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பிரான்சின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள Pont-à-Bucy near Nouvion-et-Catillon இல் இன்று செவ்வாய்கிழமை 5 சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

47 வயதுடைய கணவன் மனைவி, 14, 18, 20 வயதுகளை உடைய இரண்டு மகன்கள், ஒரு மகள் ஆகியோருடைய சடலங்களையே இன்று காலை உள்ளுர் நேரப்படி 8.15க்கு மீட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த அபத்தமான மரணங்கள் பற்றி உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Capturehill Capturekhnkol