முப்பது வருடங்களுக்கு முன் எங்களை வலுக்கட்டாயமாக விரட்டியடித்தார்கள்

கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னர் எங்களை வலுக்கட்டாயமாக இங்கிருந்து விரட்டியடித்தார்கள் என முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி தென்னமரவாடி போன்ற கிராமங்களில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழர்கள் 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதன் பின்னர் 30 வருடங்களுக்கு பின்னர் 2011ஆம் ஆண்டிற்கு பின்னர் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மக்கள் இப்பகுதிகளில் மீள்குடியேறி வாழ்நது வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்படி பிரதேங்களில் மீள்குடியேறிய அதிகளவான குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த ஏழு ஆண்டுகளாக தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

Capturevghfஇது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது நிலைமை தொடர்பில் தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் கூறுகையில்,

இப்பகுதியில் நாங்கள் கடந்த முற்பது வருடங்களிற்கு முன்னர் எங்களுடைய கிராமத்தில் வீடுகளுடன் சகல வசதிகளையும் கொண்டு வாழ்ந்த போது அரசாங்கம், எங்களை வலுக்கட்டாயமாக இங்கிருந்து விரட்டியடித்தார்கள்.

முற்பது வருடங்களிற்கு பின்னர் நாங்கள் எமது ஊருக்கு வருகின்றபோது எல்லாமே அழிக்கப்பட்டு காடுகளாகவே காணப்பட்டது. அவற்றை திருத்தி நாங்கள் மீள்குடியேறியிருக்கின்றோம்.

Capturechfcfஆனால், தற்போது எங்களுக்கு வீட்டுத்திட்டங்களை தர மறுக்கின்றார்கள். பயனாளிகளை தெரிவு செய்யும் போது, புள்ளியிடல் முறையில் தகுதி கொண்டிருக்கவில்லையென தட்டிக்கழிக்கின்றார்கள்.

முப்பது வருடங்களிற்கு முன்னர் நாங்கள் புள்ளிகளுடன் வாழ்ந்தவர்கள். எமது உறவுகளை, பிள்ளைகளை யுத்தத்தில் இழந்து தனி அங்கத்தவர்களாகவும், அங்கத்தவர்களாகவும் நாங்கள் இப்போது குடியேறியிருக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.