கடந்த வருடம் பிரம்ரன் நகரில் அமைந்துள்ள பிரம்ரன் சிவிக் வைத்தியசாலையில் 4,300ற்கும் மேற்பட்ட நோயாளிகளிற்கு கூடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் அதிகரித்த எண்ணிக்கையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஏப்ரல் முதல் 2017ஏப்ரலிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 4,352நோயாளிகள் கூடத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர் என சிரிவி செய்திகள் ரொறொன்ரோவினால் பெறப்பட்ட உள் குறிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
போதிய படுக்கை அறை வசதி இன்மையால் சில நோயாளிகள் 70மணித்தியாலங்கள் கூடத்தில் படுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
பிரம்ரன் வைத்தியசாலையின் அவசர சேவை பிரிவு வருடமொன்றிற்கு 90,000நோயாளிகளை உள்ளடக்க கூடியதாகவே கட்டப்பட்டது.ஆனால் 2007ல் வைத்தியசாலை திறக்கப்பட்ட பின்னர் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.