இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 100 வயது மூதாட்டியை மது போதையில் இளைஞர் ஒருவர் மிக கொடூரமாக பாலியல் துஷ்பிரோயகம் செய்தமையால் மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
”உத்தரப் பிரதேச மாநிலம் – மீரட் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தனது சகோதரருடன் 100 வயது மூதாட்டி வாழ்ந்து வந்துள்ளார்.
தனியாக இருந்த மூதாட்டியை மது போதையில் வந்த இளைஞர் பாலியல் பாலியல் துஷ்பிரோயகம் செய்துள்ளார்.மூதாட்டியின் கதறல் சத்தம் கேட்டு அங்கே வந்த மூதாட்டியின் சகோதரர் மூதாட்டியை இளைஞனிடமிருந்து மீட்டுள்ளனர் .
மேலும் மூதாட்டியின் சகோதரனைக் கண்டதும் தப்பியோட முயன்ற இளைஞனை அயலவர்களும் ககோதரனும் சேர்ந்து மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
முதுமையின் தாக்கமும் கொடூரமாக துஷ்பிரயோகத்திற்குள்ளானதாலும் குறித்த மூதாட்டி சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.